Tuesday, March 3, 2009

இணையத்தில் அபிஷேகம்...!!!

வணக்கமுங்க,

எப்பவோ ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுனது, நானா இதை கவிதை அப்பிடின்னு சொல்லிக்குவேன்....ஆனா நண்பர்கள் யாரும் உடன்படுவது இல்லை.

நீங்களாவது படிச்சு சொல்லுங்க.......!!!

அவ்வைப் பாட்டி சொல்லித்தந்த
ஆத்திச்சூடி படிச்சது போய்,
அயல் நாட்டு மோகம் கொண்டு
ஆங்கிலத்தில் படிக்கின்றோம்.

ஆத்தா அரைச்சு வச்ச
மீன் கொழம்பு வசனை போய்,
பீட்ஸாவும் பர்கரையும்
அப்படியே விழுங்குகின்றோம்.

தபால்காரர் வருவாருன்னு
தவமிருந்த காலம் போய்,
இன்பாக்ஸில் வந்துசேரும்
ஈமெயிலுக்காய் காத்திருக்கின்றோம்.

அரசமரத்துக்கடியில குத்தவச்சு
அன்னாடம் கதை பேசிய காலம் போய்,
அரசாங்க பார்க்கு பெஞ்சில்
அமர்ந்து கொண்டு கதைக்கின்றோம்.

இயற்கையோடு இணைந்து
இன்பமாக வாழ்ந்தது போய்,
இயந்திரங்கள் துணையோடு
இறுதி நாட்கள் வாழுகின்றோம்.

இத்தனையும் மாறும்போது
இறைவா...!!! நீ மட்டும் விதிவிலக்கா,
இப்போதெல்லாம் உனக்கு
இணையத்தில் தான் அபிஷேகமே செய்கின்றோம்.
அன்புடன்,
இமைசோரான்

2 comments:

  1. வெள்ள மனசோட இருக்கீங்களே... பச்ச மண்ணுன்னு சொல்வாங்களே அது நீங்கதானா...?

    ReplyDelete
  2. நன்றி அகநாழிகை......பச்சபுள்ள நானு.....!!!

    ReplyDelete