Friday, February 27, 2009

நானும் வலைப்பூ ஆரம்பிச்சிட்டேன்......!!!

அன்புடையீர்,

தமிழ்கூறும் நல் உலகுக்கு என் அன்பான வணக்கங்கள்.

"இப்போல்லாம் ப்ளாக் எழுதுவது தான் ஸ்டைல், அமீர்கான் முதல் ஆர்யா வரை எல்லாரும் எழுதுறாங்க.... நீயும் எழுதலாமே" என்றான் நண்பன். ஆனா தமிழ்ல எழுதி பல வருசம் ஆச்சே, பள்ளிக்கூடத்தில பரிட்சை பேப்பர்ல கூட, என்னோட ப்ளூ இங்கை விட தமிழ் அய்யாவோட ரெட் இங்க் தானே அதிகமா இருக்கும். இனிமேல் நாம எங்கே எழுதுறது, அப்படியே எழுதினாலும் என்ன எழுதுறது, அதையும் மீறி யாருவந்து என்னோட கிறுக்கல்களை எல்லாம் பொறுமையா உக்காந்து படிக்கப்போறாங்க அப்படிங்கற எண்ணம் தான் மனதில் மேலோங்கி நின்றது.

சரின்னு சொல்லி வலை உலகை ஒரு வலம் வந்தா தான் புரியுது, எத்தனை வகையான தமிழ் வலைப்பூக்கள் பூத்துக்குலுங்கி இனிய நறுமனம் வீசிக்கொண்டிருப்பது. ஒரு முடிவுக்கு வந்தேன், நாமும் அழகிய பூச்செடி ஒன்ன பதியம் போட்டு வெக்கலாமேன்னு, அதுவும் கொஞ்ச நாள்ல நல்லா வளந்து, அழகா பூ பூத்து, இனிய மனம் பரப்பும் வலைப்பூவா மலரும்...அப்படிங்கர ஒரு அபார நம்பிக்கை மனசுக்குள்ள.

இப்போ வலைப்பூவில் எழுதறதுன்னு முடிவானதுக்கப்புறம், என்ன பேர்ல எழுதறது அப்படிங்கற பெரும் குழப்பம். நாலு வருசத்துக்கு முன்னடி பன்னாட்டு நிறுவனம் ஒன்னுல வேலைக்கு சேந்த புதுசுல ஒரு ஆர்வக்கோளாருல "சிட்டுக்குருவி" அப்படின்னு ஒரு வலைக்குழு ஆரம்பிச்ச நினைப்பு வரவே அந்த பேர்ல எழுதலாமேன்னு பாத்தா, ப்ளாக்கர் அந்த பேர் இல்லைன்னு சொல்லிருச்சு. அடுத்து என்னென்னமோ யோசனையெல்லாம் செய்தும் உருப்படியான ஒரு பேரும் கிடைக்கல. பள்ளிக்கூட நாள்ல இருந்தே எட்டையபுரத்து மாமேதை, மகாகவி பாரதியின் எழுத்து மேல ஒரு தீராத காதல், பாரதியோடு தொடர்புடைய பேர இருந்தா ரொம்ப நல்லா இருக்குமேன்னு வெகு நேரம் யோசனை செய்த போதுதான் நினைவுக்கு வந்தது போன வார ஆனந்த விகடனில் வெளியான க.சீ.சிவகுமார் அவர்களின் "இந்த நாள்...இனிய நாள்" என்ற சிறுகதையும் அதில் வந்த "இமைசோரான்" என்ற அற்புதமான இந்த பேரும்.

மனமார்ந்த நன்றி, நண்பர் க.சீ.சிவக்குமார் அவர்களுக்கு.

என்னமோ போங்க எல்லா பாரத்தையும் என்மேலயே போட்டு இந்த வலைப்பூவ தொடங்கிட்டேன், இனிமேல் தான் உக்காந்து உருப்படியா என்ன எழுதுறதுன்னு யோசிக்கணும்.