Friday, April 17, 2009

தமஅமுக --> தேர்தல் வாக்குறுதிகள்

வணக்கமுங்க.....!!!

தேர்தல் வந்து எல்லாரும் அதைக் குறித்தே பேசிக் கொண்டிருப்பதால்...ஒரு ஆர்வக்கோளாருல.. நாமும் ஒரு கட்சி ஆரம்பிச்சு தேர்தல் களத்துல குதிக்கலாம்னுதான் இந்த முயற்சி.

நம்ம கட்சியோட பேரு.... "னவ் த கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்"....1...2...3...4...5...6...7...8...9...சரி சரி சொல்லி விடுகிறேன்.....கீழ பாருங்க சார்.....ஹலோ கீழனா....கீழ குனிஞ்சு பாக்காதீங்கப்பு...உங்க ஸ்க்ரீன்ல....கீழ ஸ்க்ரோல் பண்ணி பாருங்கய்யா. ஆத்தீ...இப்பவே கண்ண கட்டுதே.

தமிழக மக்கள் அதிவேக முன்னேற்ற கழகம் (தமஅமுக)

கட்சியோட தேர்தல் வாக்குறுதிகளை பாக்கறதுக்கு முன்னாடி, நம்ம கட்சி வேட்பாள்ர்கள் குறித்து ஒரு சிறு குறிப்பு. நாம கட்சி ஆரம்பிக்கறோம்னு எப்படியோ தெரிஞ்சிகிட்டு தேர்தல்ல சீட்டு கேட்டு பயங்கரமான போட்டிங்க. இந்த போட்டிய சமாளிக்கறதுக்குத்தான் தமிழகத்தில் முதன்முறையாக "சிங்கிள் விண்டொ சிஸ்டம்" கொண்டுவத்திருக்கிறது தமஅமுக. அதாவது நம்ம கட்சி ஆபீஸ்ல இருக்கும் கதவு, ஜன்னல் அனைத்தையும் எடுத்து விட்டு, என்ட்ரன்ஸ்ல ஒன்டி ஒரே ஒரு ஜன்னல் மட்டுமே வைக்கப்போகிறோம். வேட்பாளர்கள் அனைவரும் அந்த ஜன்னல் வழியாக வந்து தான்....எலக்சன் சீட்டுக்கு அப்ளை பண்ண வேண்டும். அதுக்கு பேர் தான் சிங்கிள் விண்டோ சிஸ்டம்.

சரி நம்ம தேர்தல் வாக்குறுதிகளை பார்க்கலாம் வாங்க.

1. மக்கள் அதிவேகமாக முன்னேற வேண்டும் என்கிற ஒரே கொள்கையோடு தொடங்கப்பட்ட ஒரே ஒரு கட்சியான தமஅமுக ஆட்சி பீடத்தில் அமர்ந்தால், மக்களின் அன்றாட அடிப்படைத்தேவைகளை அரசாங்கமே கவனித்துக்கொள்ளும்.

2. ஒரு ரூபாய்க்கு அரிசி, ஐம்பது ரூபாய்க்கு சமையல் பொருட்கள், ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும், என்றெல்லாம் மற்ற கட்சிகள் சொல்லிக்கொண்டிருக்கும் போது, யார் வந்து கஷ்டப்பட்டு சமையல் செய்வது..என்பது தான் தமஅமுக வின் கேள்வி. எனவே தாய்மார்களின் அன்பு வேண்டுகோளின் படி வேளா வேளைக்கு அரசாங்கமே உங்கள் வீடுதேடி சாப்பாட்டை அணுப்பும். காலையில் இட்லி, பூரி, தோசை, பொங்கல், வடை ஆகியவற்றில் எது வேண்டும் என்று முதல் நாள் இரவே அரசு இணைய தளத்தில் பதிவு செய்து விட்டால் போதும், அடுத்த நாள் காலை சரியாக ஏழு மணிக்குள்ளாக பொது மக்களுக்கு டோர் டெலிவரி செய்யப்படும். மதிய உணவாக தயிர் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம், வெஜ் பிரியாணி போன்றவை தபால் மூலமாக பார்சலில் அணுப்பி வைக்கப்படும். வாரம் இரு முறை அசைவமும் வழங்கப்படும். இரவு நேரத்தில் ஆங்காங்கே நாங்கள் ஏற்படுத்த இருக்கும் அரசு நியாய விலை உணவகங்களில் இலவசமாக எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

3. இலவச கலர் டிவி என்கிறார்கள்....ஆனால்... நாள் முழுவதும் உட்கார்ந்து பார்த்தால் தான் தெரியும் அதன் கஷ்டம். ஓய்வாகவும் சாய்வாகவும் அமர்ந்து கொண்டு இலவச கலர் டீவி பார்க்க வசதியாக வீடுதோறும் இலவச் சாய்வு நற்காலியும், டியுரோப்ளெக்ஸ் மெத்தையும் வழங்கப்படும். மேலும் தமஅமுக ஆட்சிக்கு வந்தால், கலர் டிவியுடன் சேர்த்து கேபிள் கனெக்சனும், மின்சாரமும், சம்சாரமும் இலவசமாக வழங்கப்படும். மன்னிக்கவும், எங்கள் கட்சியினர் மீது எங்களுக்கே நல்ல நம்பிக்கை இல்லாத காரணத்தால் சம்சாரம் வழங்குவது இயலாத காரியம். எனவே சம்சாரம் மட்டும் நீங்களாக தேடிக்கொள்ள வேண்டுகிறோம்.

4. குடிமக்களின் நலன் கருதி, தமஅமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளை பட்டி தொட்டிகள் எங்கும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு குவாட்டர் இலவசமாக வழங்கப்படும். அதற்கும் மேலாக குடிக்க விரும்புபவர்கள் உங்கள் குடும்ப அட்டையினை அடையாளமாக காட்டி மலிவு விலையில் பாட்டில்களை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.

5.செல்போன் இலவசம் என்கிறார்கள், கிரெடிட் கார்டு, பேங் லோன், மாமன், மச்சான் போன்றவர்கள் தினமும் ஆயிரம் போன் செய்து மக்களை எவ்வளவு கஷ்டப்படுத்துகிறார்கள் என்பதை தமஅமுக நன்றாக அறியும். என்வே சீன தேசத்தில் இருந்து இளம் பெண்களை வரவழைத்து உங்கள் தனிப்பட்ட செய்லாளராக நியமனம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் போன் தொந்தரவுகள் இருக்காது.

6. மக்களின் அனைத்து தேவைகளையும் அரசங்கமே கவனித்துக் கொள்ளுமாதலால், சும்மா இருப்போர் சங்கம், வெட்டிக்கதை பேசுவேர் நல வாரியம், இலவச் கலர் டிவி பார்ப்போர் இயக்கம், குடிமக்கள் கூட்டம், போன்ற இயக்கங்களைத் தொடங்கி மக்கள் நல பணிகளை சீரும் சிறப்புமாக செய்வது தமஅமுக வின் தீவிர கொள்கைகளில் ஒன்றாகும்.

இவ்வாறாக தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகவும், தமிழக மக்கள அதிவேகமாக முன்னேற வேண்டும் என்கிற உண்மையான கொள்கையுடனும் தேர்தல் களம் காணும் தமஅமுக விற்கு உங்கள் பொண்ணான வாககுகளையெல்லாம் வாரி வாரி வழங்குமாறு வேண்டுகிறோம்.

நமது கொள்கைகளுக்கு பெருத்தமாக தேர்தல் கமிஷனிடம் நாம் வேண்டிக் கேட்டுள்ள தேர்தல் சின்னம்....இதோ.

நன்றி...!!!
(தமஅமுக)

No comments:

Post a Comment