வணக்கமுங்க,
இப்போல்லாம் எங்க போனலும் எலக்சன் பத்தி தான் பேச்சு போங்க. வேற ஏதையும் கேட்க முடிவதில்லை. பஸ்ல, ரயில்ல, நடந்து போகையில கூட தேர்தல் பற்றியும், அரசியல் வாதிகளைப்பற்றியும் எல்லோரும் விமர்சனம் செய்யும் காலம் இது.
தேர்தல் வந்தாலே ஒரு கலை கட்டிவிடுகிறது என்கிறான் நண்பன். ஆனால் தேர்தல் என்பது ஏதோ போனமா, எதோ ஒரு நல்ல கட்சிக்கோ அல்லது நல்ல வேட்பளருக்கோ ஓட்டைப் போட்டோமா, வந்தோமான்னு இருந்த காலம் எல்லாம் மலையேறிப்போய் பல வருடங்களாகி விட்டது. இதை நாம் உண்ர்ந்ததாகவே தெரியவில்லை என்பது மிகுந்த வேதனையாக இருக்கிறது. காமராஜரைப் போன்ற, தோழர் ஜீவாவைப் போன்ற அரசியல் தலைவர்கள் இருந்த காலத்தில் அப்படியேல்லாம் இருந்திருந்தால் சரி தான், ஆனால் இன்றைய அரசியல் வியாதிகள் மத்தியிலும் அப்படியேதான் இருப்பேன் என்று நாம் பிடிவாதம் பிடிப்பது முறையாகாது.
சுதந்திரப் போராட்டம் முடிவடைந்த காலத்தில் மக்கள் சேவை, நாட்டின் நலனுக்காக சுய நலன் கருதாமல் உழைக்க வேண்டும், என்கிற அடிப்படையில் தான் இந்திய அரசியல் களம் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் அதில் பொது மக்கள் சேவையை விடவும் தம்மக்கள் சேவையே பெரிது என்றெண்ணும் கொடியவர் வாழும் காலம் இது. தனக்காகவும், தன்னைச்சார்ந்தவர்களுக்காவும், தன்னை துதிபாடுகிறவர்களுக்காகவும் எதுவும் செய்யத்தயாரக இருக்கும் அரசியல் வியதிகள் நாட்டை ஆட்கொண்டு விட்டனர் என்பது ஊறரிந்த ராசியம். எல்லாம் தெரிந்தும் "தலைவா வாழ்க" என்று கூவிக் கத்துகின்ற கூலிக்கூட்டங்கள் இருக்கும் வரை வியாதிகள் இருக்கவே செய்யும். ஒரு நூறும், ஒரு பீரும் இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் காலம் கெட்டழிந்து போகும் வரை இந்நோயின் பிடியில் இருந்து யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது.
குடும்ப அரசியல், குடும்ப அரசியல் என்று கதறிக் கூவுகின்றோரும், தனக்கென்று வந்துவிட்டால் விவசாயியின் மகன் விவசாயம் செய்வதில் தவறேதும் இல்லை என்று நியாயப்படுதும் காலமிது. நானே எனது வாரிசுகளோ பதவிக்கு வரவே மாட்டோம் என்று அடித்து சத்தியம் செய்தோரும் தம்மக்கள் வகிக்கும் பதவிக்காக உயிரையும் கொடுத்துப் போராடியதை உலகம் உற்றுப்பார்த்துக் கொண்டிதானிருக்கிறது. அதில் நூறில் ஒரு பகுதியை நாட்டின் நலம் குறித்தும் சிந்திகக முயற்சியாவது செய்திருக்கலாம்.
இப்போதாவது விழித்துக்கொள்வோம், மக்கள் நலன் மட்டுமே பெரிதெனக்கருதும் நல்லோரை தேர்ந்தேடுப்போம், இத்திருநாட்டை அரசியல்வியாதியின் கோரப் பிடியில் இருந்து விடுவிப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment