தான் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போதும், திமுக வின்
"மாபெரும்" வெற்றிக்கு மூல காரணமாக, அயராமல் சூறவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்த கேப்டன் விஜயகாந்தை நேரில் சந்தித்து தன்மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார் கலைஞர்.
திமுகவின் சாதனைகளைக் காட்டிலும் தம்பி விஜயகாந் தான் அதிமுகவின் வாக்குகளை பிரித்து எங்கள் வெற்றிக்கு வழிவகை செய்தவர் என்றால் அது மிகையாகாது.
தம்பி நீ வாழ்க, உன் குலம் வாழ்க, மனைவி மைத்துனரோடு நீ பல்லாண்டுகாலம் வாழ்க....என்று வாழ்த்தினார் கலைஞர்.
நாளை மறுதினம் முரசொலியில் தம்பி விஜயகாந்தை வாழ்த்தி ஒரு கவிதை எழுத இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.